இந்த’ தேவைக்கு ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் செல்லலாம்!” – அர்ச்சனா பட்நாயக்.!

மருத்துவக் காரணத்திற்காக பொதுமக்கள் 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை வாட்ஸ்-அப்பில் கூட காண்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய போது, மக்களை தொல்லை செய்யக்கூடாது என்றும், பொதுமக்கள் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மருத்துவக் காரணத்திற்காக பொதுமக்கள் 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை வாட்ஸ்-அப்பில் கூட காண்பிக்கலாம் என்று தெரிவித்தார். அவ்வாறு காண்பித்தால் பணம் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர் என்றார். இதையடுத்து, வணிகர்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *