முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது கூட்டணியில் இருக்கும் 10 கட்சி தலைவர்களுடன் திடீரென ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் எதற்காக நடைபெற்றது என்ற தகவல் இப்போது வெளியே தெரிய வந்திருக்கிறது
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் .
இந்தக் கூட்டத்தில் முக்கியமாக புதிதாக வரும் கட்சிகளை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது . தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலில் திமுக கூட்டணி மீண்டும் தொடரும் என மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதே சமயத்தில் கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை புறந்தள்ளிய அதிமுக இப்பொழுது கூட்டணி வைத்திருக்கிறது
தற்போதுள்ள சூழ்நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களது கூட்டணியை பலப்படுத்தும் சூழ்நிலையில் இருக்கிறது இதற்கிடையே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியே முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள் அவர்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.
இதே போல் தற்பொழுது பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்துள்ள சூழ்நிலையில் புதிதாக கூட்டணியில் யார் யாரை சேர்த்துக் கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என்கிறார்கள்
அதே சமயம் இந்த கூட்டத்தில் புதிய கூட்டணிக்கு ஆதரவாகவும் மறுத்தும் யார் யார் என்ன கருத்து சொன்னார்கள் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை . இருந்தபோதிலும் இதனை தொடர்ந்து திமுகவில் புதிய கூட்டணி கட்சிகள் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
