admk:முதலில் தனது பதவியை அண்ணாமலை காப்பாற்றி கொள்ளட்டும்!

முதலில் தனது பதவியை அண்ணாமலை காப்பாற்றி கொள்ளட்டும் என அ.தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது.

சென்னை:தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று மதியம் டெல்லி புறப்பட்டார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. இணைந்து போட்டியிருந்தால் 35 தொகுதிகளைப் பிடித்திருப்போம் என எஸ்.பி. வேலுமணி சொல்கிறார். அ.தி.மு.க. கட்சியில் எடப்பாடி-வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது எனக் கூறினார்.

இந்நிலையில், அண்ணாமலையின் பேட்டிக்கு அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. ஐ.டி. விங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அ.தி.மு.க. குறித்தோ, எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை.

தன் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்திகளைப் பார்க்காமல் அ.தி.மு.க. பற்றி மூக்கு வியர்க்கப் பேசும் அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பற்றிக் கொள்ளட்டும்.

ஆடு, ஓநாய், நரியென எது வந்தாலும், எப்படி கொக்கரித்தாலும் அ.தி.மு.க.வை அசைத்துக்கூட பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *