2023-24-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி செயல்திறன் தரக் குறியீட்டில், தமிழகம் 16 ஆவது இடத்தில் உள்ளது.

2023-24-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி செயல்திறன் தரக் குறியீட்டில், தமிழகம் 16 ஆவது இடத்தில் உள்ளது. மாவட்ட அளவில் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாட்டை மதிப்பிடும் செயல்திறன் தரக் குறியீடு, மத்திய கல்வி அமைச்சகத்தால் கடந்த 2017 ஆம் கல்வியாண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2022-23 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளுக்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறன் தரக் குறியீடு நேற்று வெளியிடப்பட்டது.

பயனுள்ள வகுப்பறை செயல்பாடுகள், உள்கட்டமைப்பு வசதிகள், மாணவா் உரிமைகள், பள்ளி மற்றும் குழந்தை பாதுகாப்பு, எண்மக் கற்றல் மற்றும் நிா்வாக செயல்முறை, மற்றும் விளைவுகள் என  6 பிரிவுகளின் கீழுள்ள 74 அளவுருக்களின் அடிப்படையில் இந்த தரக் குறியீடு நிா்ணயிக்கப்படுகிறது.அதன்படி, 2023-24-ஆம் ஆண்டு தரக் குறியீட்டில் 1,000-க்கு 703 புள்ளிகளுடன் சண்டீகா் முதலிடத்தில் உள்ளது.

சண்டீகரை தொடா்ந்து பஞ்சாப், தில்லி, குஜராத் ஒடிஸா போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த தரவரிசையில்  முந்தைய ஆண்டில் 563.7 புள்ளிகளில் இருந்த தமிழகம்,  சமீபத்திய குறியீட்டில் 559.2 புள்ளிகள்  என சரிந்து 16 ஆவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *