
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைக்க உள்ளது. வருகிற 9-ந்தேதி இரவு 6 மணிக்கு நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைய உள்ளது.
இதனால் புதிய மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் ஒதுக்குவது? பா.ஜ.க.வில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது? என்பது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஒரு புறம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதனிடையே தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் கிங் மேக்கர்களாக உள்ளனர். அவர்கள் இருவரும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்கள் கட்சிக்கு அதிக மந்திரி பதவியைக் கேட்கத் தொடங்கி உள்ளனர். இதனால் பா.ஜ.க. தரப்பினர் செய்வதறியாது தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்திற்கு கூடுதலாக நிதி தேவை என்பதால் நிதி அமைச்சகத்தில் ராஜாங்க மந்திரி பதவியையும் சந்திரபாபு நாயுடு கேட்கிறார்.
இதற்கிடையே ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 3 முக்கிய மத்திய மந்திரி பதவிகளைக் கேட்கிறார். மேலும் ராஜாங்க மந்திரி பதவிகளையும் அவர் எதிர்பார்த்து பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜக கூட்டணி கட்சிகளின் கோரிக்கை தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்தப் படத்தில், மோடியை ஒருபக்கம் நிதிஷ்குமாரும் மறுபக்கம் சந்திரபாபு நாயுடுவும் பிடித்து இழுப்பதாகக் ongress சித்தரித்துள்ளது.


