வி.சி.க. மீது அவதூறு பரப்புவதை ராமதாஸ் கைவிட வேண்டும் – வன்னி அரசு!

Advertisements

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது,

தமிழ்நாட்டில் சமூகப்பதற்றத்தை உருவாக்கி வன்முறையை நடத்தும் சதித்திட்டத்தை பாஜக தலைமையிலான கும்பல் முயற்சித்து வருகிறது.

கடந்த இரு நாட்களுக்கு முன் இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி- நெல்வாய் கிராமத்தில் இரு கும்பலுக்கிடையே நடந்த பிரச்சனையில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளது ஒரு கும்பல். இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.

ஆனால், இச்சம்பவத்தில் சம்பந்தமே இல்லாத விடுதலைச்சிறுத்தைகளை இணைத்து வைத்து அறிக்கை கொடுத்துள்ளனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் கலவரத்தைத் தூண்ட வேண்டும் எனும் சதித்திட்டமே இருவரது நோக்கமாக உள்ளது.

அதன் தொடர்ச்சியாகத்தான் நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நெற்குந்தியில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலையைச் சமூகவிரோதிகள் அவமதிப்பு செய்துள்ளனர்.

சமூகவிரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் தற்போது வாணியம்பாடியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு இப்படியான சமூகவிரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் விடுதலைச்சிறுத்தைகள் தேர்தல் அங்கீகாரம் பெற்று அனைத்து மக்களுக்குமான பேரியக்கமாக வலிமை பெற்றுக்கொண்டிருக்கும் சூழலில், அப்பேரியக்கத்தின் மீது அவதூறு பரப்புவதை மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கைவிட்டு பொறுப்புடனும் நேர்மையுடனும் செயல்பட வேண்டும்.

பாமகவுக்குள் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடைபெற்று வரும் அதிகாரப்போரை திசை திருப்பவே இம்மாதிரியான வன்முறைச்சூழலை உருவாக்குகிறார்கள்.

ஆகவே, தமிழ்நாடு காவல்துறை நேர்மையோடு விசாரித்து உண்மைத்தன்மையை மக்களுக்கு விளக்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *