World Heart Day: இதயம் ஒரு கோவில்… இதயமே, இதயமே…

Advertisements

உலக இதய தினம்…

இதயம் ஒரு கோவில்… இதயமே, இதயமே… உன் நினைவு என்னைக் கொல்லுதே.இதயம்பற்றிய பாடலைப் பாடுகிறேனே என்று பார்க்கிறீர்களா?.. காரணம் இருக்கிறது. .இன்று உலக இதய தினம்…
நம் உடலின் முக்கிய   உறுப்புக்களில் இதயத்திற்குத் தான்   முதலிடம்.உடலின் அனைத்து உறுப்புக்களும் ஓய்வு எடுக்கும். ஆனால் இதயத்திற்கு  மட்டும் ஓய்வு எப்போதும் கிடையாது. இதயம் இயங்கினால் தான் மனிதன் உயிரோடு    இருக்க    முடியும்.இதயம் எனும் வார்த்தையை இளகிய மனது, கருணை காதல்  போன்றவை குறிப்பிட நாம் பயன்படுத்துகிறோம். கவிஞர்கள் கூட இதயத்தை வைத்து ஆயிரமாயிரம் பாடல்கள் இயற்றியுள்ளனர். காதலர்கள் தங்களது காதல் சின்னமாக இதயத்தைத் தான் பயன்படுத்துகிறார்கள்.
அதனால் இதயமே, காதல் செய்ய  மட்டும் என்று நினைக்க   வேண்டாம். உயிரின் உயிர், இதயம் தான். இதயம் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கும், இருக்க வேண்டும்.அதற்காக உலக அளவில் ஒரு தினம் கொண்டாடுகிறோம் எனில் பார்த்துக்கொள்ளுங்கள் அது எவ்வளவுமுக்கியம் என்று பார்க்கலாம்… வாருங்கள்…
இதயம்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக மக்கள் அனைவரும் தங்களுடைய இதயத்தைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.இதயம் துடித்தால் மட்டுமே நாம் உயிர்வாழ முடியும் இதயத்துக்கு வந்து சேரும் அசுத்த ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும், கார்பன்டை ஆக்ஸைடு அதிகமாக இருக்கும்.

அதை நுரையீரல்களுக்கு அனுப்பி, கார்பன்டை ஆக்ஸைடை அதற்குக் கொடுத்துவிட்டு, பதிலாக ஆக்ஸிஜனைப் பெற்று சுத்த ரத்தமாக மாற்றி மீண்டும் இதயத்துக்குக் கொண்டு வந்து உடலுக்குத் தருகிறது. அந்த ரத்தத்தில் ஆக்ஸிஜன் மட்டுமல்லாமல், உணவுச் சத்துகளும் உள்ளன.

இதனால்தான் உடல் இயங்குகிறது. இதயம் செய்யும் இந்தப் பணியால்தான் நாம் உயிரோடு உலாவிக்    கொண்டிருக்கிறோம்.சராசரியாக நம் இதயத்தின் எடை 300 கிராம். சாதாரணமாக, இதயமானது ஒவ்வோர் இதயத் துடிப்பின்போதும் சுமார் 70 மி.லி. ரத்தத்தை உடலுக்குள் அனுப்புகிறது. இதை நிமிடத்துக்குச் சொன்னால் 5 லிட்டர். கடுமையான உடற்பயிற்சியின்போது நிமிடத்துக்கு 20 லிட்டர் வரையிலும், ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது 30 லிட்டர் வரையிலும் இது அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன. இன்றைய கால கட்டத்தில் யாருக்கு எந்த நேரத்தில் இதய நோய் வருகிறது என்று கணிக்க முடியவில்லை. 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை இதயம் சார்ந்த பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துவதற்காகவே உலக இதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை மற்றும் உப்புள்ள உணவை உண்ணுவது இதய நலனுக்கு எதிராவை. இதனால் இதய நோய் உண்டாகிறது. இதயக் கோளாறு என்பது பெரும்பாலும் ஆண்களையும், வயதானவர்களையும் மட்டுமே தாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது தவறு, பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் இதய பாதிப்பு ஏற்படலாம்.

புகைப்பிடிப்பதை நிறுத்தி 15 ஆண்டுகள் கழித்துக் கூட மாரடைப்பு வரலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. புகைப் பழக்கமே இல்லாத 6 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் காற்றில் கலக்கும் புகையால் பாதிப்பட்டு உயிரிழகின்றனர். இதில் உலக அளவில் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம். புகைப் பிடிப்பதினால் 10 சதவிகிதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்படுவதாகப் புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீரான இடைவெளியில் முழு உடற்பரிசோதனை செய்து கொள்வது நலம். ரத்தத்தின் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனைமூலம் கவனித்து வருவது. எண்ணெய் பலகாரங்களை அதிகம் சாப்பிடக் கூடாது.

உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

பெரும்பாலான நோய்களின் நிவாரணியே மௌனம், தியானம், நிதானம்தான்! எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். கோபம் டென்சனை குறைப்பது நலம். நல்ல தூக்கம், அதிக மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்வது இதய நோய் ஏற்படாமல் தடுக்கும்.

இன்றைய பணிச் சூழலில் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது. எனவே எந்தச் செயலையும் அழுத்தமின்றி செய்யப் பழகிக் கொண்டாலே இதயத்தில் அழுத்தமோ, டென்சனோ ஏற்பட  வாய்ப்பில்லை   என்கின்றனர்   நிபுணர்கள்.

உணவுப் பழக்கங்களை மாற்றி, உணவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுவதுடன், மாரடைப்பு வந்தவர்களுக்கு மீண்டும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தவும் முடியும். இதயத்தைக் காக்க மற்ற உணவு வகைகளைவிட, புரோட்டீன் வகை உணவுகள் இதயத்துக்கு இதம் தருகின்றன. புரோட்டீன் இதயத்துக்கு  நண்பன்    என்றே   சொல்லலாம்.

ஒவ்வொருவரும் ஒரு நாளில் காய்கறி அல்லது பழங்களின் ஜூஸ் குடிப்பதை வாடிக்கையாகக் கொள்ள வேண்டும். வெள்ளைப்பூண்டு கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும் சக்தி கொண்டிருப்பதால் பூண்டை உணவில் சேர்த்து வந்தால் இதயநோய்களை தவிர்க்கலாம்.

வயிறு முட்டச் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். இப்படி முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்திற்கு ஏற்ற உடல் எடை என்று ஆரோக்கியத்தைக் கடைப்பிடித்தால் இதயபாதிப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

இதயம் நிறைய அன்பும் நேசமும் இருந்தால் அதில் நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதோடு நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியுடனும் வைத்துகொள்ள பழகுங்கள். புத்துணர்வு பெற சிறிது ஓய்வு எடுங்கள். காலையும் மாலையும் சில நிமிடம் காலார நடங்கள். கோபத்தைத் தூக்கியெறியுங்கள் அனைவரிமும் நட்போடும், நேசத்தோடும் பேசுங்கள். இதயம் இதமாக இயங்கும். நாம் தினமும் நிம்மதியாக உறங்கி  நிம்மதியாக எழுங்கள்.

அது சரி பலமான இதயம், பலவீனமான இதயம் என்று இருக்கிறதா என்ன?

பலமான    இதயம்   என்பது   ரத்தத்தை  குறிப்பிட்ட நேரத்தில்  உடலின்  மற்ற  பாகங்களுக்கு அனுப்பும்.
பலவீனமான இதயம் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமான இரத்தத்தை வழங்க முடியாது. எனவே, இதய செயலிழப்பைக் கண்டறிவதிலும் கண்காணிப்பதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
இருப்பினும், இதய செயலிழப்பு என்பது ஒரு நோய் அல்ல, மாறாக மேம்படுத்தப்பட்ட மற்றும் மாற்றியமைக்கக்கூடிய ஒரு நிலை என்ற உண்மையைப் புரிந்துகொள்வது அவசியம்.உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன.
இன்றைய கால கட்டத்தில் யாருக்கு எந்த நேரத்தில் இதய நோய் வருகிறது என்று கணிக்க முடியவில்லை. 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை இதயம் சார்ந்த பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துவதற்காகவே உலக இதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யோகா செய்வோம்,,, உடற்பயிற்சி செய்வோம்,
 நன்றாக  நடப்போம்,,, நீண்ட நாள் வாழ்வோம். நம் இன்னுயிர் காப்போம்…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *