Pakistan : லாரி கவிழ்ந்து 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!

பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு தனது கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. இதன்காரணமாக, பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், லாரி மூலம் ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானிலிருந்து சொந்த நாடு திரும்பிக் கொண்டிருந்தனர்.  லக்மான் பிராந்தியத்தில் காபூல் நகருடன் இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது, லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 36 பேர் காயம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *