National Roller Skating Championship: சாதனை படைத்த வீரர்களுக்கு உற்ச்சாக வரவேற்பு!

Advertisements

குஜராத்தில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் சாதனை படைத்த தமிழ்நாடு அணியினருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் தலைவர் பூஞ்சோலை தலைமையில் இங்கிருந்து குஜராத் சென்றிருந்தது. அங்குச் சூரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆறாவது தேசிய ரோலர் ஸ்கேட்டிங்  கூடைப்பந்து போட்டியில் ஒட்டுமொத்த தேசிய அளவிலான முதல் இடத்தைத் தமிழக அணி பெற்றது.

போட்டியில் மொத்தம் 10 மாநிலங்கள் பங்கு பெற்றன. ஆண்களுக்கான 19 வயது பிரிவில் தங்கப்பதக்கம். ஆண்களுக்கான 14 வயதான பிரிவில் வெள்ளி பதக்கம், ஆண்களுக்கான 11 வயது A பிரிவில் தங்கப் பதக்கமும் பி பிரிவில் வென்கலமும் வென்றது. பெண்களுக்கான 17 வயது தங்கப்பதக்கம் வெற்றி பெறப்பட்டது.

வெற்றி பெற்ற அனைவருக்கும் போட்டியின் சிறப்பு விருந்தினராகக் காமன்வெல்த்தில், மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற செல்வி சரிதா மோர் மற்றும் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ராகுல் மான் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசினை அளித்தனர். இதையடுத்து குஜராத்தில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் சாதனை படைத்த தமிழ்நாடு அணியினருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *