
2023-ம் ஆண்டு முடிந்து 2024 -ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளை, மக்கள் குதூகலத்துடன் வரவேற்கின்றனர்.
கோவில், தேவாலயங்கள், சுற்றுலாதல்ங்கள், உறவினர்களின் வீடுகள் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக கோவிலகளிலும், அடுத்தபடியாக சுற்றுலாத் தலங்கள், கடற்கரை போன்ற இடங்களில் மக்கள் ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடுவதற்காக பிரசித்த பெற்ற இடங்களில் கூடி ஆனந்தப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் நிறைய இடங்கள் உள்ளன. கொடைக்கானலில் குவிந்த மக்கள் , மலைகளின் இளவரசி கொடைக்கானலில் உள்ள பல இடங்களில் பார்வையிடுவதற்காக கூடினர். வண்ணமயமான ஒளிர் விளக்குகளால் ஜொலித்த கொடைக்கானல். மக்கள் கண்குளிரக் கண்டு களித்தனர்.
அடுத்து கன்னியாகுமரியில் கடைசி சூரிய அஸ்தமனத்தைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் காத்திருந்து கண்டு களித்தனர். 2023-ம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தைக் கண்டதோடு, காலை புத்தாண்டின் சூரிய உதயத்தையும் காண கூடியதால் கன்னியாகுமரியில் மக்கள் அலை கடல் அலையோடு போட்டி போட்டனர்.
இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கோடி முனையிலும், இந்தியாவின் தென்கோடி நகரத்திலும் அமைந்துள்ள இது ‘தி லேண்ட்ஸ் எண்ட்’ என்று குறிப்பிடப்படுகிறது, மேலும் அதன் தனித்துவமான சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன புள்ளிகளுக்கு புகழ் பெற்றது.
கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனம் ஆரஞ்சு நிற பின்னணியுடனும், பாறைகளை தாக்கும் அலைகளின் சத்தத்துடனும் காணப்படுவதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.
பிரகாசமான நீல வானம் மற்றும் நீல நீருக்கு எதிராக அஸ்தமிக்கும் சூரியனுடன் இது ஒரு பிரமிப்பூட்டும் அனுபவம் என்று மற்றவர்கள் கூறுகிறார்கள்.
கடற்கரையில் உள்ள 41 மீட்டர் (133 அடி) திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம் ஆகியவை இந்த இடத்தின் பிற ஈர்ப்பு ஆதாரங்களாகும்.
கன்னியாகுமரிக்கு சூரிய அஸ்தமனத்தை ரசிக்க வந்துள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டவும், பாதுகாப்பிற்காகவும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல ஊட்டியிலும் சுற்றுலா பயணிகள் கூடினர். மலர்ப் பூங்கா, ஏரி, தொட்டபெட்டா, சூசைடு பாயிண்ட், போன்ற பல இடங்களில் ஒன்றூ கூடினர். ஏற்காடு, ஏலகிரி ஜவ்வாது மலைப் பிரதேசங்கள் மட்டுமல்லாது மேட்டூர் டேம், கல்லணை போன்ற இடங்களிலும், சென்னையில் வண்டலூர் பூங்கா, காந்திமண்டபம், கோளரங்கம், மெரினா கடற்கரைபோன்ற இடங்களில் கூடினர்.
புதுச்சேரியில் பாரதி பூங்கா, ஆரோவில், அர்விந்தர் ஆஸ்ரமம் போன்ற இடங்களில் கூட்டம் அலை மோதுகிறது. புத்தாண்டை தங்கள் விருப்பமான இடங்களில் கொண்டாடி வருகின்றனர்.



