அண்ணா பல்கலைகழக வழக்கில் புதிய திருப்பம்..! 17 பக்க அறிக்கை தாக்கல்..!

Advertisements

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 13 சாட்சிகள் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு தொடர்பாக 17 பக்கத்தில் டிஜிபி அறிக்கை அளித்துள்ளார். அதில், ஞானசேகரன் மீது ஏற்கனவே 35 வழக்குகள் உள்ளதாகவும், 5 வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் இது சார்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் திமுக – வினை சேர்ந்தவர் தான் என்று ஒப்புக்கொண்டார் . இந்நிலையில் ,இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலானாய்வு விசாரணை செய்து, வழக்கு மகிளா நீதிமன்றத்தில் இருப்பதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜூன் 12ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *