Happy New Year 2024: ரசிகர்கள் முன்பு தோன்றிய ரஜினி!

Advertisements

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லம் முன்பு கூடியிருந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை:ஆங்கில புத்தாண்டான 2024-ம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. அந்த வகையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக நடந்தது. மக்கள் இனிப்பு, கேக்குகளை வழங்கிப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. புத்தாண்டில் இன்று சாமி தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு முதலே கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.

நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்களை காண வந்த ரஜினிகாந்த் கதவின் அருகே நின்ற படி கையசைத்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லம் முன்பு கூடியிருந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். வாழைமரம், தோரணங்களால் நடிகர் ரஜினிகாந்தின் இல்லம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *