75th Republic Day 2024: வெண்புறாக்களை பறக்க விட்டமாவட்ட ஆட்சியர்!

75வது குடியரசு தினவிழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றினார் – காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.

இந்தியாவின் 75 வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய கொடி ஏற்றி மூவர்ண பலூன்களைப் பறக்க விட்டு, சமாதானத்தின் அடையாளமாக இரு வெண் புறாக்களைப் பறக்க விட்டார்.

அதைத் தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளுக்குப் பொன்னாடை அணிவித்து பாராட்டினார், நலத்திட்ட உதவிகளும்,  காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கும், 25ஆண்டுகள் மாசற்ற பணிக்காகப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.

தொடர்ந்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், துணைத் தலைவர் மனோகரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார்,  திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினிமற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *