Vanathi Srinivasan: தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு கேள்வி குறியாக உள்ளது!

தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு கேள்விகுறியாக உள்ளது எனவும் ,தமிழகத்தில் பாஜக கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு எடுக்கும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

75 ஆவது குடியரசு தினத்தையொட்டி தமிழக பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் ஹச் வி ஹன்டே மற்றும் கர்னல் தியாகராஜன் ஆகியோர் கொடியேற்றினர்.

இதில் பாஜக மகளிரணி தேசியத் தலைவி மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் மற்றும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அப்போது கர்னல் தியாகராஜன் மற்றும்
பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் ஹச் வி ஹன்டே ஆகியேிார் இந்தியாவின் சிறப்பைப் பற்றிப் பேசினார்கள்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் ஹச் வி ஹன்டா பேசியதாவது:இந்தக் குடியரசுத் தினம் தன்மானம் சின்னத்தின் அடையாளமாக விளங்கும் அயோத்தி கோயில் திறப்பு மூலம் கூடுதல் சிறப்பைப் பெற்றுள்ளது. குடியரசுக்குச் சர்தார் பட்டேலுக்கு மிக முக்கிய பங்கு வகித்தார். அதே போல வாஜ்பாய் மற்றும் அத்வானியின் பங்களிப்பும் இந்தியாவை வளர்த்த நாடாக மாற்ற உதவியது எனக் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய மகளரிணி தலைவி வானதி சீனிவாசன் பேசியதாவது:

இந்தக் குடியரசுத் தினம் மிகவும் முக்கியமான குடியரசுத் தினம். இந்த ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு நாளும் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளது. கலாச்சார தேசிய சின்னம் அயோத்தி இந்தியாவின் அடையாளத்தை மீட்டுள்ளது. தங்களது கூட்டணிகுறித்து தேசிய தலைமை முடிவு எடுக்கும். பிரதமர் வேட்பாளராக மோடி அவர்களளை ஆதரிக்கும் அனைத்து கட்சிகளும் எங்களடேன் கூட்டணி வைக்கலாமெனக் கூறினார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற பணிகளைப் பாஜக தொடங்கி இருக்கிறது. பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் மகன் மற்றும் மருமகள் மீது மிகவும் காலதாமதமான நடவடிக்கையைக் காவல்துறை எடுத்துள்ளளது. முதலமைச்சர் கட்டுபாட்டில் உள்ள காவல்துறையின் மொத்தன போக்கால் திருப்பூர் பல்லடம் செய்தியாளர் தற்பொழுது சிகிச்சைபெற்று வருகிறார். தமிழகத்தில் செய்தியாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு கேள்வி குறியாக உள்ளது. மேலும் தி்முக ஒரு ரௌடி ஆட்சியைத் தமிழகத்தில் நடத்தி வருகிறது எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *