
மீண்டும் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஆட்சி அமைக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், சானூரப்பட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலைக் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, அவர் நிகழ்ச்சியில் பேசிய போது, நம்முடைய ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்றும், மீண்டும் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்றும் கூறினார். மேலும், நமது தலைவர் தான் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
அதனால், தாய்மார்கள் அனைவரும் அடுத்த 2 மாதங்கள் களப்பணியில் இறங்கி தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



