Cricket World Cup: நியூசிலாந்து வெற்றி!

Advertisements

மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி!

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை போட்டி கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில், தற்போது வரை 10 லீக்  போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தோல்வியையே சந்திக்காமல் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன.

இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின.காயம் காரணமாக முதல் இரண்டு லீக் போட்டிகளில் விளையாடாத நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார்.

சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி  முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது. ட்ரெண்ட் போல்ட் பந்தில் லிட்டன் குமார் தாஸ் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.அடுத்து அடுத்து விக்கெட்டை இழந்தது தடுமாறிய வங்கதேச அணி கடைசியாக 50 ஒவரில் 9 விக்கெட்களை இழந்து 246 ரன்களை எடுத்தது.

விக்கெட் வீழ்ச்சி:
0-1 (லிட்டன் தாஸ், 0.1) 40-2 (தன்சித் ஹசன் தமீம், 8) 56-3 (மெஹிதி ஹசன் மிராஸ், 11.4) 56-4 (நஜ்முல் ஹொசைன், 12.1) 152-5 (ஷாகிப் அல் ஹசன், 29.5) 175-6 (முஷ்பிகுர் ரஹீம், 35.5) 180-7 (எம்டி டவ்ஹிட் ஹிரிடோய், 37.5) 214-8 (டஸ்கின் அகமது, 45) 226-9 (முஸ்தபிசுர் ரஹ்மான், 48)

அதனைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். கடைசியாக  42.4 ஒவரில்  2  விக்கெட்களை    இழந்து 248  ரன்களை எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *