வீரச் சாகசம் செய்த சிறார்களுக்கு விருது..!

Advertisements

துணிச்சலுடன் வீரச் சாகசம் செய்த சிறார்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
வீரப் பாலகர்கள் நாளையொட்டித் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறாருக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு துணிச்சலுடன் சாகசங்கள் செய்த சிறாருக்குப் பதக்கங்களை அணிவித்துப் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பித்தார்.

பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்த ஆப்பரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவ வீரர்களுக்குப் பால், உணவுப் பொருட்கள் ஆகியவற்ற எடுத்துச் சென்று வழங்கிய பஞ்சாபைச் சேர்ந்த சீக்கிய உழவரின் மகனுக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கிச் சிறப்பித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *