ஈரானின் எண்ணெய் குழாய்கள் அழிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை.!

ஈரானின் எண்ணெய் குழாய்கள் அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஈரானின் எண்ணெய் உட்கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்து சிதறக்கூடும் என்றும் ஈரானில் எண்ணெய் குழாய்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் மூடப்பட்டால் அந்த குழாய் வெடித்து விடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து, ஈரான் தலைமை போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தன்னை அணுகலாம் எனவும் அவர்கள் பேச விரும்பினால் தங்களிடம் வரலாம் எனவும் தெரிவித்தார். மேலும், தங்களிடம் நல்ல பாதுகாப்பான இணைப்பு வசதிகள் இருக்கின்றன என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *