நல்லகண்ணுவின் 101ஆவது பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!

Advertisements

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 101ஆவது பிறந்தநாளையொட்டித் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்தவர் நல்லகண்ணு என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர் நல்லகண்ணுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சியான, எண்ணற்ற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான நல்லகண்ணு நல்ல உடல்நலத்துடன் நீண்டநாட்கள் நிறைவாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *