
நேபாள் போராட்டத்தினால் 19 பேர் உயிரழந்த நிலையில் சமூக ஊடகங்கள் மீதானத் தடையை நீக்கி பிரதமர் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
நேபாளத்தின், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பதிவு செய்யத் தவறிய 26 சமூக ஊடகத் தளங்களுக்கு அந்நாட்டு அரசுத் தடை விதித்துள்ளனர்.
இந்த தடையை எதிர்த்து பெரும் அளவிலான இளைஞர்கள் காத்மாண்டுவில் நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது காவல் துறையினர் நடத்தியத் துப்பாக்கிசூட்டில் 19 பேர் உயிரழந்த நிலையில், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கு, தார்மீக ரீதியாகப் பொறுப்பேற்று நேபாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது ராஜினாமாக் கடிதத்தைப் பிரதமர் சர்மா ஒலியிடம் சமர்ப்பித்தார்.
பின்னர், நிறுத்தப்பட்ட சேவைகளை விரைவில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் சர்மா ஒலி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக ஊடகங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.
அதன் பயன்பாட்டிற்கு உகந்தச் சூழலை உறுதி செய்யவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

