ஆசிய கோப்பைத் தொடர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இருபது ஓவர் போட்டி நடைபெற உள்ளது. இதில் எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆட உள்ளன.
இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும் , ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் நான்கு சுற்றுக்கு தகுதி பெறும்.
அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும். இதுவரை இந்தியா எட்டு முறையும், இலங்கை ஆறு முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இதில் விளையாட உள்ளது.


