சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளார் தவெக தலைவர் விஜய்.!

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

வருகின்ற 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில், தவெக தலைவர் தனது முதல் சுற்றுப்பயணத்தைத் திருச்சியில் இருந்து தொடங்க உள்ளார்.

பின்னர், சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் உரையாற்றத் தவெக சார்பில் காவல்துறையினரிடம் மனு அளித்தனர். இதற்கு, காவல்துறையினர் அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து மரக்கடையில் இருந்து சுற்றுப்பயணத்தைத் தொடங்க காவல்துறையினரிடம் மீண்டும் மனு அளித்தனர். இதனையும், காவல்துறை நிராகரித்த நிலையில், காந்தி மார்க்கெட்டில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குவது குறித்து தவெகவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பின்னர், 3 ஆவது முறையும் காவல்துறையினர் அனுமதி மறுத்தால் தவெகவினர் நீதிமன்றத்தை அணுகவும் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *