அமெரிக்க போர்க்கப்பல்களைத் தாக்குவோம் – ஈரான் மிரட்டல்.!

ஈரானை நோக்கி வரும் அமெரிக்க போர்க்கப்பல்களைத் தாக்குவோம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களும், வன்முறைகளும் அதிகரித்து வருகிறது. இந்தப், போராட்டத்தினால் 6 ஆயிரம் பேர் இதுவரை உயிர்மாய்க்கப்பட்டுள்ளதாகவும், 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க மனித உரிமை அமைப்பு தெரிவித்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதற்குப், பதிலடி கொடுத்த ஈரான், அமெரிக்கா தாக்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்தது.

இந்த, நிலையில் ஈரானை நோக்கி அமெரிக்கா தனது படைகளை நகர்த்தி வருகிறது. இதுகுறித்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் ஈரானை நோக்கி வரும் அமெரிக்க போர்க்கப்பல்களைத் தாக்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.  இதன், காரணமாகப் போர்பதற்றம் அதிகரித்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *