திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் பத்து வயதுச் சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கயவன் குறித்த சிசிடிவி காட்சிகள் இருந்தும் இதுவரை குற்றவாளியைக் கைது செய்யாத காவல்துறையினருக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை நோட்டம் விட்டுக் கொண்டே பின்னால் சென்ற அந்தக் கயவன், கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியின் வாயைப் பொத்தி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குத் தூக்கிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
ஒரு பத்துப் பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ஆதாரமுமின்றி ஒரு அப்பாவியை அடித்துக் கொன்ற தமிழகக் காவல்துறை, பத்து வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் அடையாளங்கள் தெரிந்தும் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவது ஏன்? என்று நாகேந்திரன் வினவியுள்ளார்.
சிறுமியின் சார்பாக திமுக பிரமுகர் யாராவது தலையிட்டால் மட்டும் தான் தகுந்த விசாரணை நடக்குமா? என்றும் வினவியுள்ளார்.


