Iraq : வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 50 பேர் பலி..!

ஈராக்கின் குட் நகரில் உள்ள பெரிய வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கின் குட் நகரில் உள்ள பெரிய வணிக வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வணிக வளாகத்தில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் நிறைந்திருந்தனர்.

தீயில் இருந்து தப்புவதற்காகப் பலர் கட்டடத்தின் கூரையில் நின்ற படங்களும், உட்புறம் தீக்குள் சிக்கியவர்களின் படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தியதாகவும், இந்தத் தீ விபத்தில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் வசீத் மாகாண ஆளுநர் முகமது அல் மியாகி தெரிவித்துள்ளார்.

வணிக வளாகக் கட்டடத்தின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *