
கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகள் வீடுகளில், லோக்ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
கர்நாடகாவில் முறைகேடாக சொத்து சேர்த்த அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி சொத்து ஆவணங்களை கைபற்றி உள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் பேரில் நான்கு நாட்களில் ஓய்வு பெற இருக்கும் பெங்களூரு பஞ்சாயத்து ராஜ் என்ஜினீயரிங் துறை அதிகாரி மல்லிகார்ஜூன் அலிபூரின் வீட்டில் சேதனை நடத்தினர்.
மேலும் கலபுரகியில் உள்ள அவரது அலுவலகம், சன்னூர் பி.டி.ஓ. ராமச்சந்திரன் வீடு ஆகியவற்றிலும் சோதனை நடத்தியுள்ளனர். இதே போல் சிவமொக்கா, ஷிகாரிபுரா மற்றும் ஹோசநகர், சிக்கமகளூரு, உள்ளிட்ட இடங்களிலும் இந்த அதிரடி சோதனை நடந்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டு வருகிறது.


