Zamin Pallavaram: யூடீயுப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தது வீசிய சிறுவர்கள்!

ஜமீன் பல்லாவரத்தில் வங்கி ஊழியர் வீட்டின் அருகே மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியமூன்று சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் யூடீயுப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தது வீசியதாகப் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை ஜமின் பல்லாவரம் சுபம் நகர், பகுதியில் வசித்து வருபவர் பாக்கியராஜ் (வயது-38) இவர் தனியார் வங்கியில் மேனேஜராகப் பணிபுரிந்து வருகின்றார், இந்த நிலையில் வீட்டுக்குள் குடும்பத்துடன் பாக்கியராஜ் இருந்தபோது வீட்டின் வெளியே பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் சத்தத்தைக் கேட்டதும் உடனே வெளியே வந்து பார்த்தபோது ஜன்னல் கதவின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி கரும் புகை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் பல்லாவரம் சுபம் நகர், பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது -19) கார்த்திக் (வயது-20) மற்றும்  17-வயது மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு பேரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் நாங்கள் இரவு நேரத்தில் மது அருந்தும்போது எங்களைத் தரை குறைவாகப் பேசியதால் நாங்கள் ஆத்திரம் அடைந்து youtubeபில் நாட்டு வெடிகுண்டு எப்படி தயாரிப்பது என்று பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து அவர் வீட்டின் ஜன்னல் பகுதியில் நாட்டு வெடிகுண்டை வீசியதாகக் குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர்.அதைத்தொடர்ந்து ஐந்து பேர்மீதும் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரவை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இரண்டு பேரைச் சிறைக்கு அனுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *