America: சாம்பியன்ஷிப் சதுரங்கப் போட்டியில் சென்னை சேம்பியன் பட்டம் .!

Advertisements

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற உலகப் பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் சதுரங்கப் போட்டியில் சென்னை பள்ளி மாணவர்கள் சேம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் பன்னாட்டுச் சதுரங்கக் கூட்டமைப்பு சார்பில் உலகப் பள்ளிகள் அணி சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் 55 நாடுகளின் சிறந்த பள்ளி அணிகள் கலந்து கொண்டனர்.  இந்தியாவிலிருந்து தனியார் பள்ளி சார்ந்த சதுரங்கப் போட்டி வீரர்கள் கலந்து கொண்டனர்.

சென்னைப் பள்ளியைச் சேர்ந்த வேலவன் தலைமையில் 5 பேர் கலந்து கொண்டனர்.

ஒரு வாரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே எந்த நாட்டோடும் தோல்வியே சந்திக்காமல் தழிழக மாணவர்கள் வெற்றி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

போட்டியில் வென்று விமான மூலம் சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் சக மாணவர்களும் பெற்றோரும் வரவேற்பு அளித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *