Advertisements

அ.தி.மு.க. சட்டமன்றக் குழு தலைவராக எஸ்.பி.வேலுமணியை நியமிக்க கோரி, தற்காலிக சபாநாயகரிடம், எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து
அ.தி.மு.க.வினர் கடிதம் வழங்கியுள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சிக்குள் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. எடப்பாடியின் தவறான கொள்கை முடிவுகளால்தான் அ.தி.மு.க. தோல்வியடைவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
அதோடு, தி.மு.க.விற்கு ஆதரவான நிலைப்பாட்டில் எடப்பாடியும், த.வெ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்பதற்கு கூட அ.தி.மு.க.வினர் 2 அணிகளாக சட்டமன்றத்திற்கு வந்தது பேசுபொருளானது. அ.தி.மு.க.வில் உள்ள 47 சட்டமன்ற உறுப்பினர்களில், 30 பேர் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் வசம் உள்ளனர்.
இதனிடையே, 17 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் சட்டமன்ற குழு தலைவராக தொடர வேண்டும் என சட்டமன்ற செயலாளர் மற்றும் தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
மேலும், சட்டமன்ற அ.தி.மு.க. துணை தலைவராக சி.வி.சண்முகத்தை நியமிக்கவும், கொறடாவாக சி.விஜயபாஸ்கரை நியமிக்கவும் கோரி கடிதம் வழங்கியுள்ளனர்.
Advertisements



