
ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சிபிஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம், தும்பிப்பாடி கிராமத்தில் உள்ள ஒட்டதெரு பகுதியில் கடந்த 6 மாதங்களாகச் சரிவரக் குடிநீர் வராததை கண்டித்து 100 மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தும்பிப்படி கிராமம், ஒட்டதெரு பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்தப் பகுதிக்குக் கடந்த ஆறு மாதங்களாக முறையாகக் குடிநீர் வழங்காததை கண்டித்து இரண்டு மாதத்திற்கு முன்பு சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டும், தும்பிப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து இன்று ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், பெண்கள் எனப் பல்வேறு தரப்பினரும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒமலூர் தாலுக்கா விவசாய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்.மாவட்ட தலைவர் கணபதி மற்றும் மாவட்ட செயலாளர் எஸ்.கே.சேகர்.மாவட்ட துணை தலைவர் சின்னராஜ்.சிபிஎம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

