ஏற்காட்டில் கொட்டித்தீர்க்கும் கனமழை : சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவிப்பு.!

ஏற்காடு மலையில் கனமழை பெய்து வருவதால் அங்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கொடைக்கானல், நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஏற்காடு மலைப்பகுதிகளிலும் அதி கனமழை பெய்து வருவதால் அங்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் உள்ளூர் மக்களும் வாகனங்களில் மிகக் கவனமாகப் பயணிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *