ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 53 ஆவது போட்டியில் லக்னோவை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 19 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 53 ஆவது போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதில், சிறப்பாக விளையாடிய ஜாஸ் இங்லீஸ் 85 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதில், மிகவும் அதிரடியாக விளையாடிய உர்வில் படேல் 65 ரன்கள் எடுத்து அசத்தினார்.



