Sexual Harassment: உல்லாசமாக இருந்த படத்தை வெளியிட்டு இளம்பெண்ணுக்கு மிரட்டல்!

Advertisements

தனது ஆசைக்கு இணங்கவில்லையெனில் வீடியோவைச் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என இளம்பெண்ணை வாலிபர் மிரட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் பிரவீன் குமார் (வயது 26). இவரும் 19 வயதுடைய இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். அப்போது இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதனை இளம்பெண்ணுக்குத் தெரியாமல் தனது செல்போனில் பிரவீன்குமார் புகைப்படம் எடுத்து வைத்திருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் அந்த இளம்பெண்ணை மீண்டும் ஆசைக்கு இணங்குமாறு பிரவீன்குமார் வற்புறுத்தியுள்ளார். அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், நாம் உல்லாசமாக இருந்தபோது எடுத்த போட்டோ என்னிடம் உள்ளது. எனவே ஆசைக்கு இணங்கவில்லையெனில் அதனைச் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன். மேலும் எனக்குப் பணமும் தர வேண்டும் எனக் கூறி மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த படத்தை அவரது வாட்ஸ்-அப்புக்கு பிரவீன்குமார் அனுப்பியுள்ளார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண், இதுகுறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *