நெல் ஈரப்பத அளவைத் தளர்த்தத் திருமாவளவன் வலியுறுத்தல்.!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்வதால் கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பத அளவைத் தளர்த்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 17 விழுக்காடு என மத்திய அரசு நிர்ணயித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடகிழக்குப் பருவமழையின் காரணமாகத் தமிழ்நாட்டில் அறுவடையாகும் நெல் கூடுதல் ஈரப்பதம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நெல்லின் ஈரப்பதம் 17 விழுக்காட்டுக்கு வரவேண்டுமெனில்,

அதனை உலர்த்த வேண்டும் என்றும், ஆனால் விவசாயிகளிடமோ, கொள்முதல் நிலையங்களிலோ நெல்லை உலர்த்த வசதியில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவைத் தளர்த்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *