வாக்களித்தவர்கள் மட்டுமல்ல.. வாக்களிக்காதவர்களும் தவிக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின்.!

தவெகவிற்கு வாக்களித்தவர்களே தங்களின் முடிவை நினைத்துப் புலம்பித் தவித்து வருவதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

சென்னையில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொணடு பேசினார்.

அப்போது, தவெகவிற்கு வாக்களித்த வாக்காளர்களே தற்போது தங்களின் முடிவை நினைத்துப் புலம்பித் தவித்து வருவதாகத் தெரிவித்தார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டதாகவும், பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

பெண்களைப் பாதுகாக்கக் கூடிய சிங்கப்பெண் படையைப் பாதுகாப்பதற்கே இப்போது இன்னொரு பாதுகாப்புப் படையை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

தவெக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகளுக்கும் போதைப்பொருளுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது என்று விமர்சித்தார். தவெக ஆட்சி இன்னும் ஆறு மாதங்கள் கூடத் தாக்குப் பிடிக்காது என்று ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *