புதிய கல்விக் கொள்கை வழியே இந்தித் திணிப்பு..!

புதிய கல்விக் கொள்கை என்ற திட்டத்தில் எப்படியாவது தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சையில் உள்ள கரந்தை தமிழ் சங்கம் நுழைவு வாயிலில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மற்றும் கல்லூரியின் முன்னாள் செயலாளர் ராமநாதன் ஆகியோரது மார்பளவு உருவ சிலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை சட்டசபையில் பாடக்கூடாது என ஒரு கூட்டம் சொல்லி திரிகிறது என்று பாஜகவை விமர்சித்தார்.

 

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடும் பொழுது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என சட்டசபையில் அரசாணை போட்டவர் கலைஞர் என்றார். கலைஞர் மற்றும் ராமநாதன் சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பைக் கொடுத்த தமிழ் சங்கத்திற்கு நன்றியைத் தெரிவித்தார். செம்மொழி வீரர் ராமநாதர் உடைய பங்கு சிறப்பு வாய்ந்தது என்று புகழாரம் சூட்டினார்.  புதிய கல்விக் கொள்கை என்ற திட்டத்தில் எப்படியாவது தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது எனக் குற்றம் சாட்டினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *