
வியட்நாமில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் வியட்நாமில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் மல்யுத்த அணி 4 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்று, ஆசிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா இதுவரை இல்லாத அளவிற்குப் பதக்க எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது என்றும் பெண்கள் மல்யுத்த அணி 6 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று, இதுவரை இல்லாத அளவிற்குப் பதக்க எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இது நமது மல்யுத்த வீரர்களின் மிகச்சிறந்த செயல்பாடு என்று கூறினார். நமது மல்யுத்த வீரர்களுக்கு வாழ்த்துகள் என்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு தனது நல்வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார்.




