அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை – வானிலை மையம் தகவல்..!

Advertisements

அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வங்கக் கடல் நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தின் அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 25ஆம் நாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகத் திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 26 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஊத்தில் 25 செண்டிமீட்டர், காக்காச்சியில் 23 செண்டிமீட்டர், மாஞ்சோலையில் 21 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் ஆகிய இடங்களில் 13 செண்டிமீட்டர், கயத்தாற்றில் 11 செண்டிமீட்டர், காயல்பட்டினத்தில் 10 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *