
உத்திர பிரதேசத்தில், சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
உத்திர பிரதேசத்தில், உள்ள நெய்டாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர், அவர், சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்குகளைப் பார்வையிட்டார்.
இந்த வர்த்தக கண்காட்சியில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலை வகித்தார். பின்னர் பிரதமர் மோடி, விழாவில் பேசிய போது, சர்வதேச வர்த்தக கண்காட்சியில் 2 ஆயிரத்து 250க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் காட்சிப்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.
இந்த வர்த்தக கண்காட்சியில் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கலந்து கொண்டனர்.


