NandhanTrailer: சசிகுமார் படத்தின் டிரெய்லர் வெளியானது!

Advertisements

சசிகுமார் நடித்துள்ள ‘நந்தன்’ படத்தை இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார்.

சென்னை:’சுப்ரமணியபுரம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. பின்னர் இவரது நடிப்பில் வெளியான ‘நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டி புலி’ போன்ற படங்களை நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் வெளியான ‘கருடன்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தந்தது. இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் நடித்த, ‘நந்தன்’ திரைப்படம் நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை ‘உடன்பிறப்பே’ என்ற படத்தை இயக்கிய ரா.சரவணன் இயக்கியுள்ளார். சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், ‘நந்தன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘எக்கி எக்கி பாக்குறான்’ என்ற பாடல் வெளியானது. தற்போது ‘நந்தன்’ படத்தின் டிரெய்லரும் வெளியாகி உள்ளது. இதுகுறித்த பதிவைச் சசிகுமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *