உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குவதாகவும் பேச்சு..!

Advertisements

எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா, இப்போது ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளதாக மத்தியச் சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் இந்திய ரோடு காங்கிரசின் ஆண்டுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார்.

ஒரு காலத்தில் எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருந்ததை நினைவுகூர்ந்தார். இப்போது எத்தனால், மெத்தனால், ஹைட்ரஜன் ஆகியவற்றைத் தயாரித்து எரிபொருளாகப் பயன்படுத்தி வருவதால், எரிபொருளை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குவதாகவும் தெரிவித்தார். இந்தியா உலகின் குருவாக மாறுவதற்கு நீர், எரியாற்றல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் உலகத் தரமான உட்கட்டமைப்பு தேவைப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *