K. Annamalai: மோடி ஆட்சியில் பொருளாதாரம் முன்னிலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

நடைபயணத்தின் போது  வழிநெடுகிலும் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அண்ணாமலை  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் நம் நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்தார்.

தி.மு.க.வில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நடந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு திருக்குறள், தமிழ் மொழி இருக்கைகள், காசி தமிழ் சங்கம், 46 சங்க இலக்கியங்கள் என மொழி பெயர்ப்புக்கு ரூ. 700 கோடி செலவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் தமிழை புகுத்தி வருபவர் பிரதமர் மோடி.

வருகிற தேர்தலில் பா.ஜனதா ஆட்சி அமைத்து கும்பகோணம் மகாமகத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்தியா முழுவதும் ஒரு கோடி மக்கள் திரண்டு மகாமக விழாவை சிறப்பாக நடத்துவோம்.

மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் பேரிடர் மீட்பு நிவாரண நிதியாக ரூ.813 கோடி வழங்கி உள்ளது. நடப்பாண்டில் மத்திய அரசு மேலும் ரூ. 900 கோடி வழங்கி உள்ளது. மொத்தம் ரூ. 1,713 கோடி செலவு செய்யப்படாமல் தமிழக அரசு கணக்கில் உள்ளது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *