இன்றும் நாளையும் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

இன்றும் நாளையும் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுவதாகத் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

நாளை திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் 4 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *