உலக நாடுகள் ஆபத்தான முறையில் சென்று கொண்டிருப்பதாக WHO அச்சம்.!

Advertisements

மத்திய கிழக்குப் போர் ஆபத்தான கட்டத்தில் சென்று கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது..

ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள அணுசக்தி முக்கியத்துவம் வாய்ந்த தளங்களுக்கு அருகில் நடந்ததாக கூறப்படும் தாக்குதல்கள் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எச்சரிக்கை விடுத்தார். மேலும், மத்தியக் கிழக்கு மோதல் ஒரு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில் உள்ள நடன்ஸ் செறிவூட்டல் வளாகம் மற்றும் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள இஸ்ரேல் நகரமான டிமோனா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவதால், மத்தியக் கிழக்கில் போர் ஒரு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாக டெட்ரோஸ் தெரிவித்தார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *