சிறு வயதில் அவருக்கு விமானியாகும் ஆசையும், பின்னர் கிரிக்கெட் வீரராகும் ஆசையும் இருந்தது. 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும்போதுதான் சினிமா மீது ஆர்வம் திரும்பியது.
திரைப்படத் தயாரிப்பைக் கற்றுக் கொள்ள கனடா சென்றார். அங்கு விளம்பர ஏஜென்சிகளுடன் இணைந்து விளம்பரப் படங்களை உருவாக்க உதவியது தனக்கு மிகுந்த தன்னம்பிக்கையைத் தந்ததாகக் கூறினார்..
டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் தன்னார்வலராகப் பலமுறை பணியாற்றியுள்ளதாகவும், அப்போது பல்வேறு உலக சினிமாக்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தார்..
நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகும் ‘சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்..
சினிமா குடும்பத்தில் பிறந்ததால் செட்களுக்குச் செல்வது வழக்கமான ஒன்றாக இருந்ததாகவும், அதுவே தனக்கு இயல்பான சூழலை ஏற்படுத்தித் தಂದதாகவும் குறிப்பிட்டுள்ளார்…



