தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கி வருகின்ற 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இப்பணியில் 19 ஆயிரம் அதிகாரிகளின் மேற்பார்வையில், 1 லட்சத்து 15 ஆயிரம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடவுள்ளனர். அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவத்தைப் பயன்படுத்தி தகவல்கள் திரட்டப்பட உள்ளன. இந்தியாவில் முதல்முறையாக இக்கணக்கெடுப்பில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக பிரத்யேக செல்போன் செயலி மூலம் தரவுகள் பதிவு செய்யப்படும். வீட்டுவசதி நிலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் இந்த தேசியப் பணியில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.


