கம்போடியா நாட்டு இளம்பெண்ணை கரம் பிடித்த கன்னியாகுமரி இளைஞர்.!

கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞரை, கம்போடியா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் கடல் கடந்து வந்து கிறிஸ்தவ முறைப்படி கரம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்  இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அஜின்தாஸ். கம்போடியாவில் உள்ள உணவகத்தில் பணியாற்றியபோது அந்நாட்டைச் சேர்ந்த லேக்னாவுடன் பலக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததுள்ளார். பின்னர், கடந்த மே மாதம் சொந்த ஊருக்கு திரும்பிய பின்னரும் இருவரும் கைபேசி மூலம் காதலைத் தொடர்ந்தனர். இதற்கிடையே அஜின்தாஸின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவருக்கு ஆறுதல் கூறுவதற்காக லேக்னா இந்தியா வந்தார்.

பின்னர் திருமணத்திற்குத் தேவையான ஆவணங்களைத் தயாரித்து மீண்டும் இந்தியா வந்த லேக்னா, அஜின்தாஸின் குடும்பத்தினருடன் தங்கி திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டார். இதையடுத்து, மிடாலக்காடு பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் உறவினர்கள் முன்னிலையில் இருவரும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் மணமக்களை வாழ்த்தி, விருந்தில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *