Advertisements

முதலமைச்சர் விஜய் தனது நண்பர் எனவும் முதல் படத்திலேயே அவருக்கு பாடல் பாடிய பெருமை தனக்கு உள்ளதாகவும் பாடகரும் நடிகருமான மனோ தெரிவித்துள்ளார்.
சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மக்களுக்குச் சிறப்பு மருத்துவ சிகிச்சை சலுகைகள் வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், நடிகருமான மனோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உறையாற்றினார். அப்போது விஜய் அவருடைய முதல் படமான நாளைத் தீர்ப்பில், ‘சின்னத் தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு என்ற பாடலை பாடிய பெருமை தனக்கு உள்ளதாக கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகமல் உடலையும், மனதையும் ஆரோக்கியமாகப் பேண வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிகழ்வில் தனியார் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி சிவா, மருத்துவ சேவைகள் பிரிவின் துணைத் தலைவர் செல்வா ராமசாமி மற்றும் குடியிருப்பு நலச்சங்கப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
Advertisements


