Trump vs Modi : பாகிஸ்தான் பிரச்னையில் மத்தியஸ்தம் தேவையில்லை – மோடி !

Advertisements

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

ஜி7 மாநாட்டின்போது மோடி – டிரம்ப் சந்திப்பதாக இருந்த நிலையில், முன்னதாகவே டிரம்ப் புறப்பட்டுச் சென்றதால், தொலைபேசியில் பேசியுள்ளார். சுமார் 35 நிமிடங்கள் இருவரும் உரையாடியதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்த உரையாடலின்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை என்றும், பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாலே மோதல் கைவிடப்பட்டது என அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். மேலும் கனடா பயணத்தை முடித்துகொண்டு இந்தியா திரும்பியதும் அமெரிக்காவிற்கு வருமாறு பிரதமர் மோடியை டிரம்ப் அழைத்ததாகவும், அதற்கு பல்வேறு அலுவல்களை மேற்கோள் காட்டி வர இயலாது என்பதை பிரதமர் கூறியதாகவும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார். தொடர்ந்து QUAD உச்சிமாநாட்டிற்கு இந்தியாவிற்கு வர டிரம்பிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *