Car Accident: கார் மரத்தில் மோதிய  விபத்தில் 5 பேர் பலி!

Advertisements

திருமண நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பியபோதுகார்  சாலையோரம் இருந்த மரத்தில் மோதிய  விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராசிஞ்:ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் மாவட்டத்தில் உள்ள பக்மாரா பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. அந்தக் காரில் மொத்தம் 10 பேர் பயணித்த நிலையில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துகுறித்து கிரித் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நிகழ்ந்திருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில், காரில் பயணம் செய்தவர்கள் தோரியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள திகோடி என்ற பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *